Monday, 8 July 2013

எங்கே நீ?



ஏனடி என்
இதயத்தைத் தொட்டு
இமை கட்டிச் சென்றாய்?
இருள் முட்டி விண்ணுள்
உனைத் தேடச் செய்தாய்,
பனி தொட்ட தென்றல்
கரம் தொட்ட உந்தன்
விரல் விட்டு கண்கள்
புறம் பார்த்ததில்லை,
அகம் தைத்த வேலாய்
கயல் விழிகள் கொண்டோய்,
உனைக் காண எந்தன்
உயிர் தேடுதிங்கே!

2 comments: