Sunday, 28 July 2013

தீபமென ஆவாள்















மலரம்பில் விழி செய்து
மனம் கொய்ய வீசி விட்டாள்.
விரல் தொட்ட நொடியிலெனை
விரகத்தில் ஆழ்த்தி விட்டாள்.
சில நேர சங்கடங்கள்
சுகமென்று மாற்றிவிட்டாள்.
கண நேர கற்பனையில்
கவிதைகளாய் ஊற்றெடுத்தாள்.

காத்திருப்பை வரமாக்கி
கார்குழலாள் சென்று விட்டாள்.
கவலைகளை உரமாக்கி
கவி நிலவில் பதியம் வைத்தாள்.
சுவடுகளில் உரம் சேர்த்து
சுமை மழுங்க சுவைப் பூத்தாள்.
சீக்கிரமாய் என்னுயிரின்
தீபமென ஆவாளோ?

No comments:

Post a Comment