Tuesday 23 July 2013

என்னிணை





















அஞ்சன விழியாள்
கொஞ்சிடும் மொழியால்
என் விழி கலந்து
புன்னகை செய்தாள்.

வெந்தணலா மென்
வாழ்வினில் வந்த
பூமலர் மேகப்
பொன்மழைச் சாரல்.

மூங்கிலின் நாதம்
முத்தமிழ் வேதம்
சங்கம மாகும்
அவளித ழோரம்.

காரிகை யென்றொ
காதலி யென்றோ
பாரினுள் சொல்லும்
பெண்ணவ ளில்லை.

தோழியு மாவாள்
பாதியு மாவாள்,
மீதியா மென்னை
மீட்கவும் செய்வாள்.

சோர்ந்திடும் வாழ்வின்
சுவையென வந்தாள்.
பார்க்கவன் வாழ்வின்
பாகனு மானாள்.

இப்படி என்னுள்
இருப்பவ ளுக்கு
எப்படி என்னிணை
என்றெனைச் சொல்ல?

No comments:

Post a Comment