Saturday 27 July 2013

காந்தம் நீ

மலர்கண்ணில் மையெழுதி
மனம் கொய்துப் போனவளே!
மதிவானின் கரி மசியை
குழலாக்கிக் கொண்டவளே!

இனிப்பான தேன்மதுவில்
இதழ் மூழ்கித் திளைத்தனவோ?
பனிமுத்தை உள்ளடக்கி
பவளங்களில் கோர்த்தனவோ?

நேர்கொண்ட நாசியினில்
நெளியு மிரு தாழை மடல்,
கூர்வாளைப் போன்ற இரு
புருவங்களே காவலனெ,

நீந்துதடி இரு மீன்கள்
நிலவொளியின் குளுமையுடன்,
காந்தமென எனைக் கண்டால்
மாறுவதேன் சொல்லடியோ!

No comments:

Post a Comment