Sunday 14 July 2013

பசி






















பசியற்றுப் போனால்
வாழ்வென்ன ஆகும்?
உயிர் பசியோ,
உடல் பசியோ,
அறிவுப் பசியோ,
ஆற்றல் பசியோ?
இல்லாது போனால்
என்னாகும்?
உடல் வளர்ச்சியற்று
உயிர் பெருக்கமற்று
மனம் தளர்ச்சியுற்று
மரணத்தைத் தொட்ட
நடைபிணமாய்
எதற்கந்த வாழ்க்கை?
வளர்வதும் தேய்வதும்
இல்லாத பொருளெது?
வளர்சிதை மாற்றம்
இல்லாது போனால்
வாழ்க்கையின் பொருளெது?
பசியற்றுப் போனால்
ருசியற்று போமாம்,
ருசியற்ற வாழ்க்கை
சாரற்ற சக்கை.
உயிர் தேடலின்றி
உடல் வாழ்வெததற்கு?

No comments:

Post a Comment