Tuesday 23 July 2013

பயம்


















சில்லிடும் தென்றல்,
எனைக் கூப்பிடும் பறவைகள்,
என் தாயின் தளிர் கரமாய்
விரல் தொட வரும் மேகம்,
ஓடி வரும் சுனை நீரில்தான்
எத்தனைத் தெளிவு,
என் பாட்டியின் கதைகளைப் போல்,
துள்ளி வரும் மீன்களிடம்
பேசிக்கொண்டே
ஒரு தூண்டிலைப் போட்டேன்.
சிறுவனிடமா சிக்குவதென
ஓடி ஒளிந்தன.
மனம் தளராமல் காத்திருந்தேன்.
சர்ர்ரென வந்தது
ஓரு பாம்பு!
எனக்கேனோ பயமில்லை,
“போடா” என அதட்ட
தலை தூக்கி
எனைப் பார்த்த பாம்பு
தலை கவிழ்த்து
மறைந்தது.
ஏனோ?
அன்று என்னை
அணுகாத பயம்
இன்றுவரை
எனக்கில்லை,
எதற்கும்,
எப்போதும்.

No comments:

Post a Comment