Tuesday 27 October 2015

கன்னக் கதுப்பு



மெத்தென்ற நின் கன்னக் கதுப்புகளில்
நித்தமும் என்னிதயம் தொலைக்கிறேன்

சிறகுதிர்க்கும் பறவை



என் வார்த்தைகளுக்கிணங்க
சிந்தனை விடுத்து
ஒவ்வொன்றாய் சிறகுதிர்க்கிறாய்

வான் நிறைந்த மேகத்துகள்களிடையே
உன் பறத்தல் எளிதாயில்லையென அறிந்தும்

இடை நிறுத்தமில்லா பயணத்தில்
எவ்வாறேனும் தற்காலிக இருப்பிடம் தேடென்று சொல்லி
சிறகுகளை கவர்வதிலேயே கவனமாயிருக்கிறேன்.

அன்பு மொழிக்கு
அத்தனையும் தரத் தயாராயிருக்கும் நீ
தானிழந்தவற்றின் மதிப்பறியாததை போல
எந்தன் அன்பே அளப்பரிதெனெ புன்னகைக்கிறாய்

இறுதி இறகும் உதிர்ந்த பின்னரே உணர்கிறேன்
இனியொருபோதும் ஒட்டாத சிறகாய்
உன்னையே எனக்காக
இழந்துவிட்டிருக்கிறாயென..

Sunday 25 October 2015

கவிதை மாலை


மஹா சுமன்
கார்மேகத் திரை கிழித்து
கானமழைப் பொழிந்தாற் போல்
கள்ளமிலாப் புன்முறுவலில்
காந்தம் கவர் கன்னிப்பூ

நந்தகோபால் சண்முகம்
அட என்னையும் பேஸ் புக்குல போடுவீங்களா
Like · Reply · 6 · October 22 at 8:49am

Thamizh Thendral
கார்மேகம் போல
கள்ளமிலா
உள்ளக்காரி,
அகத்தினழகை
புறத்திலே
புன்னகைப் பூவாய்
உதிர்த்திடும்
உள்ளத்து உவகைக்காரி,
அன்றலர்ந்த
தாமரைபோல
அன்புமட்டுமே
அழகியலின்
பிரதானமென்று
அகிலத்திற்கு
அறிவுறுத்தும்
ஈடில்லா
இதயக்காரி.....
Like · Reply · 18 · October 22 at 8:51am

மஹா சுமன் நண்பரே
Thamizh Thendral அசத்தல். மனம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கின்றது
Like · Reply · 7 · October 22 at 8:52am

நந்தகோபால் சண்முகம்
அழகுக்கு நிறம் தேவையில்லை புன்னகை ஒன்றே போதும் அந்த பெண்ணிடம் அது இருக்கிறது
Like · Reply · 11 · October 22 at 8:54am

Rajesh Padman
காண்பதில் காலம் போவதால் எழுத்துக்களில் இச்சையில்லை...!.
உணர்வுகளுக்கு நிறமில்லை...!.
Like · Reply · 14 · October 22 at 8:55am
Ananth Kesav
உன் வெள்ளைச் சிரிப்பில் உள்ளம் கொள்ளை கொள்ளுதடி.. கார் வண்ணப்பூவே.. கவர்ந்திழுக்கும் கருங்குயிலே..
Like · Reply · 13 · October 22 at 8:55am

Manju Silan
அட..கருப்பு நிறத்தழகி
உதட்டு சிவப்பழகி
சில்லரைய சிதறிட்டேன்டீ-உன்
சிரிப்பில் சில்லரைய சிதறிட்டேன்டீ......அழகு சகோ
Like · Reply · 12 · October 22 at 9:21am

நெடுந்தீவு தனு
கறுப்பழகி உன்
கார்மேக கூந்தலிலே
கிறுங்குதடி என் உசிரு
கீறிடுவோம் புது கவிதை....

குழந்தை உதடு வைச்சு
கூவத்து அழகை உடைத்து
கெந்தி இவள் சிரிக்கையில..
கேட்டுத்தான் பாருங்களன்...
Like · Reply · 13 · October 22 at 9:22am · Edited

மஹா சுமன்
உண்மைதான் அண்ணா
நந்தகோபால் சண்முகம்
Like · Reply · 1 · October 22 at 9:23am

மஹா சுமன்
எழுத்துக்களுக்கு நேரமில்லையெனினும் எண்ணங்களை அழகாகப் பொழிவதிலும் ரத்தினச் சுருக்கமாக மொழிவதிலும் நீர் திறன் வாய்ந்தவரே நண்பரே Rajesh Padman
Like · Reply · 7 · October 22 at 9:23am

Rajesh Padman
இப்படி உசுப்பேற்றி சிந்தனையும் வார்த்தைகளும் ரணகளமானதுதான் மிச்சம் நண்பா. மனதில் தோன்றியதை விட தோன்றவைக்கும் நண்பர்களை அடைந்ததே எனக்கு பெருமை.
(உங்கள் அளவுக்கு நான் worth இல்லை நண்பா...!).
Like · Reply · October 22 at 5:02pm

மஹா சுமன்
கொள்ளை கொண்ட மனம் கவிதை பொழியத் தொடங்கியதோ ஜீ! அழகு
Like · Reply · 1 · October 22 at 9:24am
மஹா சுமன்
ஆஹா சகோ Manju Silan பாட்டாவே பாடிட்டீங்களே
Like · Reply · 6 · October 22 at 9:26am

மஹா சுமன்
குழந்தை உதடுகொண்டு குதூகலம் காண்பிக்கின்றாளோ. அழகு சகோ
நெடுந்தீவு தனு
Like · Reply · 7 · October 22 at 9:27am

Dhass Mani
காட்டுப் புஷ்பங்களை
காதலோடு சூடினாய் உன்
கார் கூந்தலில்!
காட்டுச் சிறுக்கியே நானும்
காதல் கொண்டு வீழ்ந்தேன் உன்
காந்தப் புன்னகையில் wink emoticon
Like · Reply · 19 · October 22 at 9:33am
Mohammed Usman இது எப்ப
Like · Reply · 2 · October 22 at 12:12pm
Dhass Mani அதான் தெளிவா சொல்லிட்டேனே.. அப்புறம் என்ன சகோ??
Like · Reply · 2 · October 22 at 7:23pm

பொன்மகள் பொ.மா.இராஜாராமன்
கள்ளமில்லா
வெள்ளை
புன்னகையில்
கருமையை
மறைத்த
கள்ளி
பூ வை
Like · Reply · 10 · October 22 at 9:38am

Rajathirajan King
கருப்பு கவி
Like · Reply · 4 · October 22 at 9:41am

அறிவுச்சுடர்
இயற்கையாய் இருப்பது அழகு
இயல்பாய் இருப்பது பேரழகு
Like · Reply · 9 · October 22 at 9:47am
Rajesh Padman உன்மத்தமான பின்னூட்டம்.
Like · Reply · 2 · October 22 at 10:25am

Sha Hameed
மத்தாப்பு சிரிப்பில்
மனதை அள்ளினாள்
வித்தாக விளைந்தது
கருமையானாலும்
வெண்முத்தாக மனம் கொண்ட
சிக்காத சிட்டழகி ..!

மொட்டரும்பு
புன்னகையை
முகத்தில் கொண்டாள்
மணற்திட்டாக வந்து
மணக்கடலில்
படிந்து விட்டாள்.....
Like · Reply · 17 · October 22 at 9:51am · Edited

Sha Hameed
உங்களின் கவி வரியை
விவரிக்க இயலா
வியப்பு புன்னகை
விரிக்கிறாள்...!
Like · Reply · 12 · October 22 at 9:52am

Suseela Murthy
பூக்களால்
புனையப்பட்ட புன்னகைக் கவிதையொன்று
பூலோகம்
வந்து வண்ணங்ளால் வசீகாிக்கிறது .....
உளள்த்தில் உற்பத்தியான
தூசு மாசு நெருங்காத
தூய்மைக் களிப்பு
உதட்டுத் தாம்பாளத்தில் பாிமாறப்படுகிறது.... தாம்பூலமாக .....
Like · Reply · 12 · October 22 at 9:58am · Edited
Sha Hameed அருமை சகோதரி...
Like · Reply · 1 · October 22 at 9:55am

தீதும் நன்றும்
நிறம் கிழிக்கும்
வெளிச்சப் புன்னகை
சிந்திய விழியெங்கும்
வெள்ளைப்பார்வை
Like · Reply · 14 · October 22 at 9:55am
Sha Hameed சூப்பர் சகோ.!
Like · Reply · 2 · October 22 at 9:56am
தீதும் நன்றும் மகிழ்ச்சி கவிஞரே
Like · Reply · 2 · October 22 at 10:05am

அமுதம் சிவா
எல்லா
மனிதருக்கும்
இறந்த காலம்...!!!
இருட்டறைக்கு
மட்டுமே
எதிர்காலம்...!!!
ஆனால்..!!
இந்த சிரிப்பழகிக்கு
இனி எல்லா காலமூம்
பொற்காலமே...!!!
என் கவிஞனின்
கண்ணீல்
பட்டதால்...!!!
Like · Reply · 16 · October 22 at 10:03am · Edited

Selvam Selvam
உண்மை நிறததை உடலிலும்
உள்ளத்து நிறத்தை உதட்டிலும்
ஏந்திய
இயற்கையின் குறையிலா படைப்பு
Like · Reply · 10 · October 22 at 10:11am

பொன்மகள் பொ.மா.இராஜாராமன்
நிறம்
உருவம்
தவிர்த்து
ரசித்த
மந்தகாச
பொ(பு)ன்னகை
Like · Reply · 7 · October 22 at 10:20am · Edited
அருள் குமரன் சூப்பர் கேப்டன்
Like · Reply · 1 · October 22 at 2:01pm
பொன்மகள் பொ.மா.இராஜாராமன் நன்றிங்கோ தமிழே
Like · Reply · October 22 at 2:08pm

Anbu Ansari Mohamed
கார்மேகமாய் தேகம்
வெண்மேகமாய் சிரிப்பூ
காந்தமாய் கயல்விழி
கருத்த கூந்தலில் பூந்தோகை
விரித்தாடும் பேரழகியடி நீ...!
Like · Reply · 9 · October 22 at 10:38am · Edited
Sha Hameed அருமை சகோ
Like · Reply · 1 · October 22 at 10:48am
Anbu Ansari Mohamed நன்றி ஷா.
Like · Reply · 1 · October 22 at 11:01am

மஹா சுமன்
காந்தப்புன்னகையையும் கவிதையால் கவர்ந்தீரே சகோ Dhass Mani அருமை
Like · Reply · 3 · October 22 at 10:43am

Natarajan Kn
இருளில் மூழ்கும் சூரியனோ உன் பற்கள்
Like · Reply · 4 · October 22 at 11:11am

MyLife MyThoughts MyWay
கரிசல் மண்ணில் பூத்து குலுங்கும் பல வண்ண மலர்கள்....
Like · Reply · 4 · October 22 at 12:08pm

மஹா சுமன்
பூவைத்த பூவையின் புன்னகைக்கு கவிதை பூத்ததோ! அழகு அண்ணா
பொ.மா.இராஜாராமன் பொன்மகள்
பொன்மகள் பொ.மா.இராஜாராமன் நன்றி மஹா கவிஞரே
Like · Reply · 1 · October 22 at 1:35pm

மஹா சுமன்
ஆம் நண்பரே Rajathirajan King
Like · Reply · 1 · October 22 at 12:09pm

மஹா சுமன்
சகோ அறிவுச்சுடர் இயல்பும் இயற்கையும் இணையும் அழகிதுவோ. நன்றி
Like · Reply · 2 · October 22 at 12:11pm

மஹா சுமன்
மனக்கடலெங்கும் புன்னகை கொண்டு நின் வாழ்க்கை படகை தரை நிற்க வைத்த மணற்திட்டோ அவள். அருமை நண்பா Sha Hameed
Like · Reply · 2 · October 22 at 12:14pm
Sha Hameed அழகு
Like · Reply · 1 · October 22 at 12:19pm

மஹா சுமன் ஆஹா
அழகிய ஹைக்கூ அண்ணா அமுதம் சிவா
Like · Reply · 1 · October 22 at 12:15pm

மஹா சுமன்
எனது கவி வரியல்ல நண்பா Sha Hameed நமது நட்புக்கள் அனைவரது கவிதைகளையும், உங்களுடையதையும் சேர்த்து
Like · Reply · 1 · October 22 at 12:16pm

மஹா சுமன்
உதட்டுத் தாம்பாளத்தில் தாம்பூலமாக தூய்மைக் களிப்பு/ எத்தனை அழகுற மொழிந்தீர்கள். மனம் அழகிய உங்கள் தமிழால் களிக்கின்றது. நன்றி சகோ Suseela Murthy
Like · Reply · 1 · October 22 at 12:18pm · Edited

Arockia Joseph Rajan
படமும் சொல்லும் அழகு ...
Like · Reply · 2 · October 22 at 12:19pm

மஹா சுமன்
வெள்ளைப்பார்வை கொண்டு நிறம் கிழித்தாள். என்ன ஒரு அழகிய கற்பனையும் மொழியாடலும். மிக அழகு நண்பரே தீதும் நன்றும்
Like · Reply · 2 · October 22 at 12:19pm

மஹா சுமன்
பொற்காலம் பிறக்க அன்புள்ளங்களின் அரவணைப்பே காரணம் அண்ணா
அமுதம் சிவா. மகிழ்ச்சி
Like · Reply · 1 · October 22 at 12:21pm

Karthikeyan Singaravelu
அழகி
Like · Reply · 4 · October 22 at 12:24pm

Agilandeswari Segarin
தன் மனம் கவர்ந்த
கண்ணாளனைக் கண்டதால்
கார்மேகம் கண்ட
வண்ணமயிலாய்
வண்ணமலர் மங்கையவள்
அகமும் முகமும்
மலர்ந்தாளோ
கை கொள்ளா சிரிப்பழகி
கருத்த நிறத்தழகி்
Like · Reply · 5 · October 22 at 12:34pm

Mathy Nilavu
வண்ணக்கனவுகளை சிரசில் தாங்கி தன் எண்ணப்புன்னகையை உதட்டில் ஏந்தி உற்சாக ஊற்றினை உறைவிடமாகக் கொண்ட கருவிழியழகி.....
Like · Reply · 7 · October 22 at 12:42pm

நிலவரசன் சண்டியர்
சிகையழகை
விட,
சிரிப்பு அழகா
இருக்கு!!
முத்துப்போல்
பல்லழகி!!
கார் மேகம்
பொறாமைகொள்ளும்,
கருப்புநெறத்தழகி-!!!!!
Like · Reply · 5 · October 22 at 12:57pm

மஹா சுமன்
உண்மை நண்பா Selvam Selvam உள்ளத்து அழகே மேம்பட்டு நிற்கிறது
Like · Reply · 2 · October 22 at 1:09pm

மஹா சுமன்
மந்தகாச புன்னகை அழகு அண்ணா
பொ.மா.இராஜாராமன் பொன்மகள்
Like · Reply · 2 · October 22 at 1:09pm

மஹா சுமன்
அழகிய வர்ணிப்பு சகோ Anbu Ansari Mohamed
Like · Reply · 2 · October 22 at 1:11pm

மஹா சுமன்
இருளை கிழிக்கும் சூரியனாம் அவள் சிரிப்பு ஐயா Natarajan Kn
Like · Reply · 1 · October 22 at 1:12pm

மஹா சுமன்
கரிசல் மண்ணில் பூத்துக்குலுங்கும் மலர்கள். ஆஹா அழகு தோழரே MyLife MyThoughts MyWay
Like · Reply · 3 · October 22 at 1:13pm

மஹா சுமன்
நன்றி நண்பா Arockia Joseph Rajan
Like · Reply · October 22 at 1:16pm

மஹா சுமன்
ஆம் நண்பரே Karthikeyan Singaravelu நிஜமான அழகி
Like · Reply · October 22 at 1:18pm

மஹா சுமன்
கருத்த நிறத்தழகியின் அகமலர்ந்த சிரிப்பை அழகான வரிகளில் சொன்ன விதமழகு நட்பே Agilandeswari Segarin
Like · Reply · 1 · October 22 at 1:23pm

மஹா சுமன்
உற்சாக ஊற்றின் உறைவிடம். ஆம் நட்பே. அழகாச் சொன்னிங்க Mathy Nilavu
Like · Reply · 1 · October 22 at 1:24pm

மஹா சுமன்
கண்கவர் கருப்பு நெறத்தழகி. அழகு நண்பரே
நிலவரசன் சண்டியர்
Like · Reply · 1 · October 22 at 1:25pm

அருள் குமரன்
பிள்ளைச்சிரிப்பு
கொள்ளைப்பார்வை
களவாடும் கருப்பழகு....
ஒருகணம் உற்றுநோக்குகையில் உலக அழகே
உரிமைகொண்டாடும் சின்னக்குழந்தையிவள்...
Like · Reply · 6 · October 22 at 1:34pm

பொன்மகள் பொ.மா.இராஜாராமன்
கிகி ஒன்னுகூடிட்டாங்கப்பா ஆசான் ஞே
Like · Reply · 2 · October 22 at 1:36pm

Kala Puvan
கள்ளமில்லாச் சிரிப்புக்காரி
கார்மேக வண்ணக்காரி
கருமைக் கட்டழகி
காரிகையின்
காதல் பார்வையில் சிக்கிய
காளை எவனோ//
Like · Reply · 8 · October 22 at 1:38pm

வன வேடன் ஏகலைவன்
கார்கூந்தலது சூடிய மலர்கொத்து
மறுநிமிடமே
மணம் கமழ ...See More
Like · Reply · 12 · October 22 at 1:49pm

அருள் குமரன்
கிளியோபாட்ராவை
வம்புக்கிழுக்கும்அழகுக்குவியலோ....
Like · Reply · 6 · October 22 at 1:57pm
வன வேடன் ஏகலைவன்
நல்ல ரசனை மிகுந்த சிந்தனை. ..
நினைத்தேன் சொல்லிவிட்டிர்களே
Like · Reply · 3 · October 22 at 2:18pm
அருள் குமரன்
அருள் குமரன் ஒரேசிந்தனாஓட்டமோ....நன்றி.
Like · Reply · 3 · October 22 at 2:25pm

Ratnavel Yogendra
உதட்டுச் சிரிப்பாலே உள்ளம் கொள்ளை கொள்கிறாள் , கண்களின் சிரிப்பாலே இதயம் வருடிச் செல்கிறாள்.!
Like · Reply · 12 · October 22 at 2:14pm

Mohammed Usman
முத்தள்ளி வீசுகிறாள்
மோக விழியாள்...
கரும்பு நிறத்தால் ...See More
Like · Reply · 11 · October 22 at 2:18pm

வண்ண மயில்
உன் பற்களின் நிறமோ
இதயம்....?
Like · Reply · 3 · October 22 at 2:52pm

Govindh K Govindh Raj
ஒரு பூவீன் புன்னகைக்கு கவிஞர்களின் வரிகள் கோர்ந்து கவி மாளைச்சூட அருமையான பயணம் நீளும் சந்தரபத்தில் குறுக்கிட வருந்துகிறேன்
அனைவருக்கும் வாழ்த்துக்கள் :-D:-D:-D:-D
Like · Reply · 7 · October 22 at 2:58pm

சரவணா ஹரி
களிரெனத் திமிரணைய
கார்முகில் நிறத்தணைய

கன்னக் கதுப்பணைய
கருங்கூந்தல் காற்றணைய

வெண்முத்துப்
பல்லணைய
கருயிதழோரம்
சிரிப்பணைய

செம்மலர்ப் பூவணைய
சொக்குமணம் அவளணைய

காந்தப் பொருளணைய
கவீயீர்ப்பில் நின்னுருவணைய

பளீர்ச்சிரிப்பில்
பார்க்கும் விழிகளில்
பதியமிட்ட கருப்பழகி...
Like · Reply · 19 · October 22 at 3:29pm
Ratnavel Yogendra
அணை போடும் பினனூட்டம் அருமை.!
Like · Reply · 7 · October 22 at 4:09pm
அமுதம் சிவா
கருப்பழகி
பதிந்து விட்டாள்
எல்லோாின் மனதிலும்
தங்களின் கவி போல...!!!
Like · Reply · 5 · October 22 at 5:15pm
வன வேடன் ஏகலைவன்
செம்மையக்கா
Like · Reply · 3 · October 22 at 5:46pm
பொன்மகள் பொ.மா.இராஜாராமன்
அருமை சகோ சொல்லாடல்
Like · Reply · 3 · October 22 at 7:54pm
சரவணா ஹரி
மகிழ்ச்சியும் நன்றிகளும் சகோ... Ratnavel Yogendra... அமுதம் சிவா... வனவேடன் ஏகலைவன்
smile emoticon
Like · Reply · 3 · October 22 at 7:55pm
சரவணா ஹரி
நன்றி சகோ.. பொ. மா இராஜாராமன்...smile emoticon
Like · Reply · 2 · October 22 at 7:56pm
Agilandeswari Segarin
ஆஹா
Like · Reply · 1 · October 22 at 9:29pm
Jagan Nathan
ஆஹா செம அருமை பிரமிப்பு சகோதரி
Like · Reply · 1 · October 22 at 11:04pm
Kala Puvan
அருமையான பின்னுட்டம் அழகுக் குவியல் உங்கள் சொற்களில்// அழகு வாழ்த்துக்கள் ஹரி//
Like · Reply · 1 · Yesterday at 2:09am
Mathy Nilavu
அழகு
Like · Reply · 3 · October 22 at 3:32pm

V.m. Ramesh
குப்பைக்குள் குண்டு மணி போய்
குண்டு மணிக்குள் குப்பை வந்தது
Like · Reply · 4 · October 22 at 4:21pm

Sivagnanam Tamilcholai
முகத்தில் செயற்கைப் பூச்சு ஏதுமின்றி, சிரிப்புப் பூ மாத்திரம் சூடி, கள்ளமிலா உள்ளத்தையும் களிப்பையும் கண்களில் காட்டி, காண்போரைக் கட்டியிழுக்கும் கவினுரு! செயற்கை ஒப்பனையை செயலிழக்கச் செய்யும் இயற்கை அழகு மேவிய மங்கை!!
பற்களின் வெண்மை,
பெண்மையின் நுண்மை,
அழகின் திண்மை,
சொக்கி நிற்கும் ஆண்மை,
இதுதான் உண்மை!!!
Like · Reply · 9 · October 22 at 7:25pm · Edited

மதனா மதனா
பூவைத்ததால் பூவையும் அழகு
பூவைமேல் இருப்பதால் பூவும் அழகு
கள்ளமில்லாமல் கண்சிமிட்டும்
கறுப்பு நிறத்தழகியின்
புன்னகை அதைவிட அழகு
அவ்வழகிக்கு தாங்கள் வடித்த கவி அதனிலும் அழகு..!!!
Like · Reply · 9 · October 22 at 5:01pm

சத்தி சக்தி
புன்னகை அழகென்பேன்
பூக்களும் உதிரா உன்
மின்னும் பற்களென்பேன்

அடிபனியா அகங்காரம்
நான் என்பேன் எனை
வெள்ளும் புன்னகை
நீ என்பேன்..

நித்தம் தேயும்
வளரும் மதியென்பேன்
எனை நிதமும்
வாழவைக்கும் புன்னகை உன்
கதி ரென்பேன்..

வார்த்தைகள் திரட்டி
உன் பெயர் அன்பென்றுரைப்பேன்

#அபிநயம் புரியும்
உன் தமிழ் அழகென்பேன்
அதுவே தமிழென்பேன் அழகே !!
-சத்தி
Like · Reply · 11 · October 22 at 5:20pm · Edited

Manivannan Duraisamy
ஒற்றை வரியில் சொல்வேன் .....கருப்பு நிலா வெட்கப்பட்டு சிரிக்கிறது.......இனிய மாலை வணக்கம்
Like · Reply · 6 · October 22 at 5:21pm

சத்தி சக்தி
சகோ நீண்ட இடைவெளியின் ஞாபங்களை வரிகளில் வெளிபடுத்த உங்களாலும் அக்கா சரவணா வால் மட்டிமே முடியும், எனையும் எழுத தூண்டும் உங்களின் மனம் அழகோ அழகு சகோ
Like · Reply · 5 · October 22 at 5:38pm

Subhasri Kannan
கள்ளமில்லா புன்சிரிப்பில் கருப்பழகி வனதேவதை
Like · Reply · 3 · October 22 at 6:33pm

Sakunthala Srinivasan
அழகு
Like · Reply · 1 · October 22 at 6:34pm

சரவணா ஹரி
சக்தி சத்தி தம்பி...smile emoticon
Like · Reply · 1 · October 22 at 6:38pm

Devatha Tamil
இயற்கையானவள்/இயல்பானவள்/கறைபடிந்த கண்களுக்கு/கறைநீக்க கள்ளமில்லா புன்னகையை/நிறைவாகத்தருகின்றாள்/கொள்வீரே...மானிடரே
Like · Reply · 4 · October 22 at 7:40pm

Ram Kamal
கருவாச்சி நின்னை செதுக்கிய வடிவம் கண்டாலே மரப்பாச்சிக்கும் உயிர் வருமே! கருப்பி நீ அரிசிப் பல் காட்டி சிரிச்சா கருப்பட்டியும் கற்கண்டா மிளிருமே.!
Like · Reply · 14 · October 22 at 7:44pm
Jagan Nathan
செம செம அருமை
Like · Reply · 2 · October 22 at 10:29pm

Chandru Jayasankaran
உன்
வெண் சிரிப்பைக்
காணும் வேட்கையில்
போட்டிப் போட்டு
தலை சாய்ந்தனவோ
நீ சூடிய
காட்டுப் பூக்கள்...
Like · Reply · 10 · October 22 at 8:16pm

அமுதம் சிவா
படத்தை போட்டு
பரிசுத் தொகையும்
அறிவித்தவா்களுக்கு
கூட இத்தனை கவிதைகள்
வருவதில்லை...!!!
அன்பால் இனைந்த
கவிஞா்கள்
அனைவரின் கவிகளும்
பிரமாதம்
சூப்பா்
என் கவிஞரின்...!!
கருப்பழகிக்கு
கவி வரைந்த
அனைவருக்கும்
என்
மனமாா்ந்த
நன்றி
நன்றி
நன்றி
Like · Reply · 13 · October 22 at 9:22pm · Edited

Subashini Suba
சாமி சிலையும்
கருமை நிறத்தின்
கலையழகே
காந்த விழியின்
கருப்பழகியும் பேரழகியே..

வெள்ளை மனம்
கொண்டவளே..
காட்டுபூவை சூடியே.
சில்லறை சிரிப்பிலே
சிதறடித்தாளோ.

ஆபரணம் ஏதும்
அணியாமலேயே..
அசத்தும் அழகியே...

அனைவரையும் காந்தர்வ
கன்னி கருப்பழகிய
கவனிக்க வைச்சீட்டீங்களே
கவிஞரே..நட்பே..
Like · Reply · 12 · October 22 at 9:30pm
அமுதம் சிவா
சூப்பா்க்கா...
இப்போது தான் நினைத்தேன்
அக்காவை காணலியே என்று..!!
Like · Reply · 2 · October 22 at 9:35pm · Edited
Subashini Suba
ஹாஹா கவியின் ரசிகரே...
அதான் சகோ பாசம்..
நினைச்சதும் வந்துட்டேனே..
Like · Reply · 3 · October 22 at 9:39pm
Jagan Nathan
ஆஹா அருமை நட்பே
Like · Reply · 2 · October 22 at 10:18pm
Subashini Suba
நன்றி நட்பே ..ஜெகன்
உங்கள் cmt அழகு அருமை.
Like · Reply · 2 · October 22 at 10:50pm
Subashini Suba
ஹாஹா கவியின் ரசிகரே.
அதான் சகோ பாசம்.
நினைத்ததும் வந்துட்டேனே..
Like · Reply · 2 · October 22 at 9:41pm
அமுதம் சிவா
அக்கா
சின்ன மாற்றம்
கவிஞரின் ரசிகன்
Like · Reply · 2 · October 22 at 9:49pm
Subashini Suba
நாம் அனைவருமே அப்படித்தானே.
கவிஞரின் ரசிகர்கள்..
சிவா சகோ..
Like · Reply · 2 · October 22 at 9:54pm

Jagan Nathan
வளம் நிறைந்த வண்டல் மண் சிறப்பு வண்ண மலர்களின் வணப்பு
உன் முகப்பு

கருப்பு நிறம் உன் சிறப்பு
கள்ளமில்லா உன் வெள்ளந்திச் சிரிப்பு

உன் முத்துப் புன்னகையில் உலகமே சுற்றுதடி உன் பொருப்பு

உன் விரல் நுனி அசையுதடி வீணையும் மீட்டுதடி சிறப்பு

உனைக் கண்டு மயங்காத மானுடம் தழைக்காதடி பிரம்மனின் படைப்பு
Like · Reply · 9 · October 22 at 10:52pm · Edited
அமுதம் சிவா
சூப்பா் சகோ
Like · Reply · 2 · October 22 at 9:58pm
Jagan Nathan
மிக்க நன்றிகள் சகோ
Like · Reply · 2 · October 22 at 10:00pm

Kalai Ram
உண்மை
Like · Reply · 2 · October 22 at 11:12pm

ஃபேமஸ் அழகூட்டும் நிலையம்
ரசித்தேன்
Like · Reply · 2 · 22 hrs

தாமரை மலர்
கறுப்பாயி,,,,,,, அமாவாசை நிலா போல் சிரிப்பழகி,,,,,,,,,
Like · Reply · 2 · 22 hrs

திலகம் சீதா
Lovely
Like · Reply · 1 · 17 hrs

J.p. Ranganathan
black dimond
Like · Reply · 1 · 16 hrs

Vasan Muthugani
விசிறி சாமியார் சிரிக்கும் அதே சாயல்.
Like · Reply · 2 · 16 hrs · Edited

வெண்ணிலா நிலா
புன்னகை ஆயிரம் பொன்னகைக்கு சமம்
Like · Reply · 1 · 15 hrs

Vidhya Vanan
என்னத்த தூவுறது சுமன் ?
என் கலர்ல இருக்காங்க
என் சார்பாக நீங்களே தூவுங்க
Like · Reply · 2 · 12 hrs
அருள் குமரன்
உங்கள்தங்கையோவென்றெண்ணச்செய்திடும் பேரழகியாய்.
Like · Reply · 1 · 9 hrs

மஹா சுமன்
மஹா சுமன் களவாடும் கருப்பழகு// அழகு நண்பரே அருள் குமரன் உள்ளத்தை கொள்ளை கொண்டாளோ?
Like · Reply · 1 · 9 hrs
அருள் குமரன்
அருள் குமரன் ஒருகுழந்தையாய் கொள்ளைகொள்கிறாள்
Like · Reply · 1 · 9 hrs · Edited

மஹா சுமன்
கருமைக் கட்டழகியின் காதல் பார்வையில் சிக்கியவன் எவனாயிருந்தாலும் இந்தக் கவி மழையை கண்டிருந்தால் உச்சி குளிர்ந்திருப்பான். அருமை நட்பே Kala Puvan
Like · Reply · 3 · 9 hrs

மஹா சுமன்
இதயச் சிரிப்பூ இதயங்களை கொள்ளை கொண்டது. ஆம் சகோ வன வேடன் ஏகலைவன் அருமை
Like · Reply · 1 · 9 hrs

மஹா சுமன்
இருக்கலாம் நண்பரே
அருள் குமரன்
Like · Reply · 1 · 9 hrs

மஹா சுமன்
பளீரென்ற உதட்டுச் சிரிப்பிற்கும் விழிமலர்ந்த உண்மையழகிற்கும் உள்ள திறமை அதுதானோ. நன்றி நண்பரே Ratnavel Yogendra
Like · Reply · 2 · 9 hrs

மஹா சுமன்
சோலை தலையில் சூடியவள் சேலை உடுத்த உன்னருகே உதவிக்கு வருவாளோ? ஹாஹா நன்றி நண்பா Mohammed Usman
Like · Reply · 1 · 9 hrs

மஹா சுமன்
ஒற்றை வரியில் உள்ளத்தின் அழகை சொல்லிவிட்டீரே. நன்றி நட்பே வண்ண மயில்
Like · Reply · 9 hrs

மஹா சுமன்
நன்றி நண்பரே Govindh K Govindh Raj
Like · Reply · 1 · 9 hrs

மஹா சுமன்
அழகியின் அழகை கண்டு அந்த அழகுத்தமிழ் வந்து மொழிந்ததிவோ. அதியற்புதம்
சரவணா. வேறென்ன சொல்ல. எனது நன்றியைத் தவிர
Like · Reply · 3 · 9 hrs

மஹா சுமன்
குப்பையில் பிறந்ததோ இந்த குண்டு மணி. நன்றி சகோ
V.m. Ramesh
Like · Reply · 1 · 9 hrs

மஹா சுமன்
மை விகுதியிட்டு பொய்யின்றி பகட்டில்லா பேரழகை மொழிந்த நும் தமிழின் அழகு அருமை ஐயா. நன்றி Sivagnanam Tamilcholai
Like · Reply · 1 · 9 hrs

மஹா சுமன்
அழகுக்கு அழகு சேர்க்கும் அணியோ உங்கள் மொழி. நன்றி சகோ மதனா மதனா
Like · Reply · 1 · 9 hrs

மஹா சுமன்
உன்னிதயத்தில் களிநடம் புரியும் அழகின் அபிநயத்தில் சொக்கி இன்னிசையாய் பொழிகிறாயே அழகிய கவியூட்டம். நன்றி சகோ
சத்தி சக்தி
Like · Reply · 1 · 9 hrs

மஹா சுமன்
ஒற்றை வரி குறுகத் தெறித்தக் குறள் போலிருந்தது ஐயா Manivannan Duraisamy
Like · Reply · 9 hrs

மஹா சுமன்
வனதேவதையின் வண்ணம் உள்ளத்தை கொள்ளை கொண்டது. நன்றி நட்பே Subhasri Kannan
Like · Reply · 9 hrs

மஹா சுமன்
ஆம் அம்மா Devatha Tamil கறைபடிந்த கண்களுக்கு கவின்மிகு புன்னகை. நன்றி அம்மா
Like · Reply · 9 hrs

சத்தி சக்தி
சத்தி சக்தி ஹாஹா ஆண்டுகள் பல கடந்தும் இனிய நினைவுகளை நெஞ்சுக்குள் பொறிக்கும் உம் நினைவுகள் பிரமிப்பே சகோ அபிநயம் வாழட்டும் அவளின் மனம்போல் இடையிடையே எனைபோல் சிலரைபோல் நமைபோல் அன்புள்ளங்களால்
Like · Reply · 2 · 9 hrs

Shwathi Spb
Karuppazhaghi...kanna Kathuppazhaghi.......
Like · Reply · 1 · 9 hrs

மஹா சுமன்
கருப்பட்டி கற்கண்டாய் மாறும் வித்தை இதுதானோ, அருமை ராம். அழகிய உவமையும் இனிக்கும் சொல்லும். நன்றி Ram Kamal
Like · Reply · 5 · 9 hrs

மஹா சுமன்
சூடிய பூக்களின் சாய்தலில் கூட பேரழகின் போட்டியை கண்டீரோ. மிக்க அழகு. நன்றி சகோ Chandru Jayasankaran
Like · Reply · 1 · 9 hrs

மஹா சுமன்
அண்ணா அமுதம் சிவா. பரிசுத் தொகையும் போட்டிகளும் என்னை என்றும் ஈர்த்ததில்லை. அன்பு என்றுமே ஆட்சி செய்யும் அனைவரின் மனங்களையும் என அறிந்தவன் நான். உங்கள் கூற்று உண்மையே. எனது என்று இப்பக்கத்தையும் பதிவையும் நான் கருதவில்லை. நமது என்றே என்றும் எண்ணுகிறேன்...See More
Like · Reply · 7 · 9 hrs

Jesutha Jo
கருமையிலும்
வெண்மையான
உன் இதயம்
வஞ்சமில்லாச் சிரிப்பில்
வகையாக மாட்டிக் கொண்டவன்
யாரோ,..?
Like · Reply · 2 · 9 hrs

மஹா சுமன்
கருப்பழகி நமது நாட்டின் சிறப்பை வெளிக்கொணரும் சுந்தரியல்லவா. நன்றி நட்பே. அழகிய பின்னூட்டம். Subashini Suba
Like · Reply · 1 · 9 hrs

மஹா சுமன்
பிரம்மனின் படைப்பில் பேரழகுப் பெட்டகமானவளின் புன்னகஇ முத்துக்குவியலாக மின்னுதோ. நன்றி நண்பரே Jagan Nathan
Like · Reply · 2 · 9 hrs

மஹா சுமன்
ஆம் அம்மா தாமரை மலர். நிலவு என்றும் பேரழகல்லவா
Like · Reply · 9 hrs

மஹா சுமன்
மின்னும் சிரிப்பழகி. நன்றி நட்பே Shwathi Spb
Like · Reply · 1 · 9 hrs

மஹா சுமன்
மஹா சுமன் தெரியலியே நட்பே Jesutha Jo. ஆனால் அவன் பாக்கியசாலியாக இருப்பான்
Like · Reply · 1 · 9 hrs
Jesutha Jo
Jesutha Jo நிச்சயமாக ...சுமன்
Like · Reply · 1 · 9 hrs

மஹா சுமன்
சார் Vasan Muthugani விசிறி சாமியாரை நான் பார்த்ததில்லையே
Like · Reply · 9 hrs

மஹா சுமன்
உண்மைதான் நட்பே
வெண்ணிலா நிலா
Like · Reply · 1 · 9 hrs

மஹா சுமன்
ஆம் மேடம் Vidhya Vanan அதனாலதான் நீங்களும் பேரழகாக இருக்கிங்க
Like · Reply · 1 · 9 hrs

அமுதம் சிவா
கவிதையை
காசாக்குவதில்
தங்களுக்கு உடன்பாடில்லை
என்பதை தங்களுடன் நட்பான
ஓாிரு நாட்களிலிலேயே
அறிந்தேன் கவிஞரே...!!!
Like · Reply · 2 · 8 hrs

மஹா சுமன்
நன்றி அண்ணா. இது தமிழ்த்தாய் எனக்கு கொடுத்த கலை. உங்களை போன்ற அன்பான இதயங்களால் ஊக்குவிக்கப்பட்டு வளர்க்கப்பட்ட கலை. இதை அப்படியே வளர்க்க ஆவலுடன் நான்
Like · Reply · 2 · 8 hrs

Ratha Mariyaratnam
ஆதிப் பூவிது
வாசமோ முல்லை
வம்சமோ உலகெல்லை
இம்சை பலருக்கிவள்
வாலிபர் கூட்டத்தை
துவம்சம் செய்ய வந்தாளிவள்
இவளே ஒரு அபூர்வ மலர்
இவளுக்கேன் மலர்க் கிரீடம்
ஓ மலர்களில் இவள் ராணியென்று
வண்டுகள் கொடுத்த பரிசா இல்லை
மங்கையரில் இவள் அழகியென்று
பெண்டுகள் கொடுத்த பரிசாLike · Reply · 3 · 8 hrs

மஹா சுமன்
இல்லையம்மா Ratha Mariyaratnam இம்மலர்க்கிரீடம் உங்கள் கவிமாலையால் நீங்கள் சூடிய புகழாரம்
Like · Reply · 2 · 7 hrs · Edited

Ratha Mariyaratnam
தொடரட்டும் மகன் இது போல ஆரோக்கியமான கவி மாலை....இத்தனை பேர் சூட்டிய அழகு மாலைகளை விடவா.....எனக்குத் தான் உங்கள் கவிதைகள் உடனுக்குடன் கிடைப்பதில்லை
Like · Reply · 6 hrs

Rajan Raj சிவந்த பூ தோற்க
சிரிக்கிறது
கறுப்பு

பா.தா

Like · Reply · 1 · 21 hrs