Sunday 14 July 2013

நீரற்றக் கொடி


















வருமையினை உடையாக்கி
கருவிழியில் கரி சேர்த்து
தோல் போர்த்தி உடலோடு
தனியாக நின்றாயோ?

கனவற்ற இரவுகளும்
பசி மறந்த உறவுகளும்
கரையுடைந்த விழிகளுமாய்
உனை மறந்து போனாரோ?

நிழல் கூட உனைப்போல
நீரற்றக் கொடியாக
விதை போட்ட உன் தந்தை
விடை சொல்லிச் சென்றாரோ?

இதழ்பிதற்றும் ஒலி கூட- உன்
இருளகற்ற வேண்டுமடி,
கனந்திருக்கும் இதயங்களில்
கனல் பிறக்கின் தவிடு பொடி!

மதம் மறந்து உனை யுணர்ந்து
மனிதம் பேச நாணுதடி!
நிஜம் மறந்து நிலை துறந்து
உனை உயர்த்தத் தோணுதடி!

No comments:

Post a Comment