Sunday 21 July 2013

வாய்திறவா பொதுஜனம்



ஒரு வீடு கட்டப்பட்டுக் கொண்டிருந்தபோது சுவர் இடிந்த வீட்டின் உரிமையாளர் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி இறந்துபோனார். அவர் மனைவி அரசனிடம் சென்று முறையிட்டாள். அரசன் விசாரணையை மேற்கொண்டான். கட்டடம் கட்டிய கொத்தனாரை விசாரித்தான். “கலவை கொண்டு தந்த சித்தாள் செய்த தவறு அது” எனக் கூறினான். “நான் சரியாகத் தான் கலந்தேன். கலவை கலக்க ஒரு குடம் தண்ணீர் என்று கணக்கு. ஒரு வேளை குடம் அளவு சிறியதோ என்னவோ!” எனச் சித்தாள் கூறினாள். குடம் செய்த குயவனாரோ, “நான் சரியாக்க் குடம் செய்யும் வழக்கம் உடையவன். இந்தக் குடம் செய்யும்போது மட்டும் அந்தப் பக்கமாய் போய் கொண்டிருந்த தாசியைப் பார்த்து மனச் சலனமடைந்து விட்டேன்” என்றான். பொதுமகள், “நான் தெரு வழியாகச் செல்லக் காரணம், அத்தெருக் கோடியில் உள்ள சலவையாளரிடம் என் துணிகளைப் பெறுவதற்காகத்தான். அவர் உரிய நேரத்தில் கொண்டு வந்து தருவதில்லை” என்றாள். “நான் உரிய நேரத்தில் கொடுக்க முடியாததற்குக் காரணம் நான் சலவை செய்யும் இட்த்தில் ஒரு சந்நியாசி அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தார். அவர் நிஷ்டையை கலைக்க விரும்பாததுதான் காரணம்” என்றான் சலவைத் தொழிலாளி.
     அரசன் சந்நியாசியைக் கூப்பிட்டு விசாரித்தான். அவரோ மௌனமாக, ஞானியின் இயல்புப்படி நின்றிருந்தார். அவர் பதில் ஏதும் பேசவில்லை என்பதால் அவரே குற்றவாளி என்று அரசன் தீர்ப்பு வழங்கினான். வாய்திறவா நம் பொதுஜனம் போல தண்டனைகளை அனுபவித்தல் போல அந்த சந்நியாசி தண்டனை அனுபவித்தார்.

No comments:

Post a Comment