Friday 12 July 2013

குடிமகன்

சாலையோரம்
சருகாய் அவன்,
கட்டியிருந்த
லுங்கி அவிழ்ந்து கிடக்க
கால் சட்டையும்
அம்மணத்தை மறைக்காமல்,
அவன் கைக்கெட்டும் தூரத்தில்
இரவு உண்ட உணவு மட்டும்
வெளியே...!
பருகியதெல்லாம்
உள்ளே...!
தெளியும் வரை
அவனுடல் மண்ணில்,
மனமோ
பறக்கும் அந்தரத்தில்...!
யார் அடித்தாலும்
தெரிவதில்லை,
யார் அழுதாலும்
கவலையில்லை,
கையிலுள்ள காசு
கரையும் வரை
குடிப்பான்.
கடினமாய் உழைப்பான்.
களைப்புத் தீர மீண்டும் குடிப்பான்
மனைவியை
குடித்த நேரம் அணைப்பான்,
மற்ற நேரம் அடிப்பான்.
இந்த நாட்டின்
உழைப்பாளி வர்க்கத்தின்
பிரதிநிதியாய் அவன்,
இவன் நிலை மாற
இந்நிலை மாற
இந்திய தேசம்
குடியற்றக் குடிமக்கள் கொள்ள
வரம் தருவாயா
வரலஷ்மி?

No comments:

Post a Comment