Sunday, 21 July 2013

மான்விழியாள்

















மான்விழியாள், மலரணையத்
தேன்மொழியாள், தீங்குரலால்
பூங்குயிலாய் பாட்டிசைக்கும்
புதுமொழியாள், வார்குழலாள்.

புன்னகையாய் என்மனதில்
பூத்தவளாம் பேரின்பப்
பெட்டகமாம் பாவையவள்
கொற்றவையோ கோபத்தில்?

வெண்மதியோ, விலையற்ற
பொன்மணியோ, பார் காணா
பெண்ணவளோ பேரழகு
கண்கொஞ்சும் காரிகையோ?

கொடியிடையாள் என்மனதில்
விடியலுமாய் வந்தவளை
உடையவனாய் நான் கொண்ட
உவகையினை என் சொல்வேன்!

No comments:

Post a Comment