Saturday 20 July 2013

ராஜாவும் குதிரையும்










         அந்த ராஜா குதிரை மேலேறிப் போய்க் கொண்டிருந்தார். ஓரிடத்தில் சாலை இரண்டாகப் பிறிந்தது. எந்த வழி போக வேண்டுமென அறியவில்லை.
     அங்கே ஒரு மாடு மேய்க்கும் சிறுவன் நின்று கொண்டிருந்தான். அவனிடம் பக்கத்து ஊருக்குப் போக வழி கேட்டார். வலது பக்க சாலையில் போனால் அரை காத தூரம். அரை நாழிகையில் செல்லலாமென்றும் இடது பக்க சாலையில் போனால் ஒரு காத தூரம் கால் நாழிகையில் போகலாமென்றும் சொன்னான்.
     ராஜாவிற்கு முதலில் குழப்பம். பின்னர் அந்த சிறுவன் முட்டாளெனக் கருதி விட்டு குதிரையை வலது பக்க சாலையில் திருப்பினார்.
     சிறிது தூரம் போனதும் புரிந்தது. வழியெல்லாம் மழை பெய்து சேறும் சகதியுமா யிருந்தது. குதிரைக்கு நடக்கவே இயலவில்லை. சிறிது நேரத்தில் அவரும் இறங்கி நடக்க ஆரம்பித்தார். ஊர் போய் சேரும் போது அரை நாழிகை ஆகி விட்டிருந்தது.
     

No comments:

Post a Comment