நாசியின் சுவாசத்தில்
நறுமணம் கமழ்ந்திட
புவியுடன் காதலில்
பூத்தன மலர்களும்,
பூக்களின் இடையொரு
பூவென என்னவள்
பாக்களை வார்த்திட
பருகவோ பைந்தமிழ்!
வாலிபம் சூடிய
தேன்மலர் செண்டதை
கண்டிட சோலையின்
பூக்களும் வாட்டமாய்.
காதலன் வானிலே
கரங்களால் தீண்டுவான்,
மாலையின் மயக்கத்தில்
மறுபுறம் தேடுவான்.
மகரந்தம் சூடிய
மரகதப் பூவினை
உயிரெனக் கொண்டிட
எனக்கினி பிரிவிலை.
எத்துணை பிறவிகள்
என்னுயிர் வாழினும்
என்னிலே பாதியாய்
இருப்பது அவளன்றோ?
No comments:
Post a Comment