Thursday 18 July 2013

வாய்ப்புகள்

                               ஒரு ஊரில் மிகப் பெரிய வெள்ளம் வந்து கொண்டிருந்தது. ஊரிலுளோரெல்லாம் வீடுகளாய்த் துறந்து வெளியேறிக் கொண்டிருந்தனர். ஒரு நபர் மட்டும் வீட்டை விட்டு வெளியேறாமல் அடம் பிடித்துக் கொண்டிருந்தார், “என் கடவுள் என்னைக் காப்பார்” என்று. எவ்வளவு அழைத்தும் அவர் வரவில்லை.
                               வெள்ளம் உயர்ந்து அவர் கால்கள் மூழ்கும் நிலை வந்தது. நீச்சல் அடித்து வந்து அந்த ஊர் இளைஞர்கள் அழைத்தனர். வர முடியாதென்றார்.
                               வெள்ளம் உயர்ந்து கழுத்து வரை வந்தது. படகு எடுத்து வந்து காப்பாற்ற முயற்சித்தனர். அவர் பிடிவாதமாக கடவுள் காப்பார் என்று இருந்தார்.
                               வெள்ளம் நாசியை மறைக்குமளவு வந்தது. ஹெலிபாப்டர் எடுத்து வந்து நூலேணி இட்டு காப்பாற்ற முயற்சித்தனர். அவர் பிடிவாதமாய் நின்றார். மரணம் அவரை அரவணைத்தது.
                              இறைவனிடம் சென்று முறையிட்டார். “இறைவா! நான் உன்னை நம்பித்தானே இருந்தேன். என்னைக் காப்பாற்ற நீ வரவில்லையே!”
இறைவன் சொன்னார், “முதலில் இளாஞர்கள் வடிவில் வந்து அழைத்தேன். நீ வரவில்லை. பின்னர் படகு எடுத்து வந்து நான் அழைத்தேன். நீ வரவில்லை. இறுதியில் நூலேணி கொண்டு உன்னைக் காப்பாற்ற முயற்சித்தேன். நீ பிடிவாதம் தளர்த்தவில்லை. நான் எப்போதும் வாய்ப்புகள் வடிவிலே தான் வருவேன். நீ உணரவில்லை.” என்று.
                                உங்களால் வெல்ல முடியும் புத்தகத்திலிருந்து

No comments:

Post a Comment