Wednesday 17 July 2013

சுமை

                           ஒரு குருவும் சீடனும் ஆற்றங்கரையில் நடந்து போய்க் கொண்டிருந்தனர். அப்போது ஆற்றில் ஒரு இளம்பெண் தத்தளிப்பது தெரிந்தது. “உதவி” என்று கதற முயற்சிப்பது புரிந்தது.
                          உடனே அந்த குரு ஆற்றில் குதித்து அப்பெண்ணைக் காப்பாற்றிக் கரைக்குக் கொண்டு வந்தார். அவளுக்கு முதலுதவி சிகிச்சைக் கொடுத்து உணர்வு வர உதவி செய்து பின்னர் கிளம்பினார்.
                         சிறிது நேரம் கழித்து அந்த சீடன் குருவிடம் கேட்டான், “குருவே! நாம் பெண்களை அறவே பார்க்கக் கூடாது, அப்படியிருக்க நீங்கள் ஒரு இளம் பெண்ணைத் தொட்டு தூக்கி காப்பாற்றி இருக்கிறீர்களே! இது சரியா?”
அந்த குரு சொன்னார், “நான் அந்த பெண்ணை அப்போதே இறக்கி விட்டு விட்டேன். நீ இன்னும் சுமந்து கொண்டு இருக்கிறாயே!”

No comments:

Post a Comment