Thursday 18 July 2013

கனாக் காதலி


















உலாப் போன என் கனாக் காதலி
நிலாப் பெண்ணிடம் தன் நிலை சொல்லிட
கலங்காத கற் சிலை போன்ற என்
உளம் வேதனை வச மானதே!


துடிப்போடு நீ சிரித்தாடிட
துணை நானடி துயர் கொன்றிடு,
வடிக்காத கண் எனக்காக நீ
வரம் தந்திடென் மனம் மகிழவே!


நொடிப் போது மென் னிழல் போலவே
நீங்காமல் நீ உடன் வந்திட
முடிப்பேனொரு கல்யாணமே
மணமேடையி லுன் கரம் பற்றியே!


எனில் பாதியாய் உனை மாற்றிட
எழும் ஞாயிறும் துணை நின்றிட
எழில் புன்னகை யுன் முகம் சூடவே
எதிர் காலமே இனிப்பாகுமே!

No comments:

Post a Comment