Thursday 11 July 2013

காளை



     
     அந்த இளவரசியைக் கண்டதிலிருந்து அவனுக்கு அவளை எப்படியும் மணமுடிக்க வேண்டுமென மனதில் உறுதி வந்துவிட்டது. நேரே அரசரிடம் சென்று அவர் மகளை தனக்கு கொடுக்க வேண்டுமென்று கேட்டான்.
     அதிர்ந்த அரசர் அவனுக்கு ஒரு போட்டி வைப்பதாக சொன்னார். அவரிடம் உள்ள மூன்று காளைகளில் ஏதேனும் ஒன்றின் வாலைப் பிடித்தாலே போதும், இளவரசியை தருவதாகச் சொன்னார். அவனும் சம்மதித்தான்.
     போட்டி தினத்தன்று அரங்கம் நிரம்பி வழிய முதல் காளை அரங்கத்தினுள் விடப்பட்டது. அந்த காளையை பார்த்த உடனே அவனுக்கு பயம் வந்தது. மிகப்பெரிய உருவில், சீரிக்கொண்டு வந்தது. அவனுக்கு உயிர் மேல் பயங்கர ஆசை. அதனால் அந்த காளையை விட்டு விட்டு அடுத்த காளையின் வாலைப் பிடிக்கலாமென எண்ணி விட்டு விட்டான்.
     அடுத்த காளை, அய்யோ! இதென்ன? கொம்பைக் கண்டாலே குடலெல்லாம் குதற வருதற் போன்று! திமில் கண்டால் தன் அளவிற்கு! ம்ஹூம். இதையும் விட்டு விடலாம். விட்டு விட்டான்.
     இனி வேறு வாய்ப்பில்லை. அடுத்த காளையின் வாலை எப்படியாவது பிடித்தே ஆக வேண்டும். அடுத்த காளை அரங்கத்தினுள். ஆஹா! இறைவன் என் பக்கம். இது என்ன விந்தை! இது காளையே அல்ல. கன்னுகுட்டி. நோஞ்சான். நடக்க திராணியற்றது. இதன் வாலை எளிதில் பிடித்து விடலாமென ஓடிச் சென்றால்,
     அந்த காளைக்கு வாலே இல்லை.

No comments:

Post a Comment