Saturday 27 July 2013

எங்கே சென்றாள்
















இரவு முழுதும் உறக்கமில்லை,
எங்கே சென்றாள் அவள்?
இதயத்தில்
பூட்டித்தான் வைத்திருந்தேன்,
எப்படியோ பறந்து விட்டாள்,
கருமேகங்களுக்கிடையிலோ,
தொடு வானத் தொலைவிலோ?
உருமாறிச் சென்றாளோ, இனித்
திரும்பாது என்பாளோ?
உளம் தொட்ட உடல் விட்டு
உயிர் கொண்டு சென்றாளோ?
இரவு முழுதும் உறக்கமில்லை.
உருண்டு படுத்தேன், அவள்
உடல் தொட்டு விழித்தேன்,
அடடே...
எல்லாம் கனவா?
இரவு உணவில்
இஷ்டம் இல்லையென
கோபித்துப் படுத்தவனின்
கனவினிலே கண்டதுவா?
நிஜத்தில்
கண்டதில் மகிழ்ச்சி,
காணாது கண்ட
கனவை எண்ணி அதிர்ச்சி,
அவளில்லை என்ற
கனவையே
ஜீரணிக்க இயலவில்லை.
இனி,
இரவில் சண்டை செய்யலாகாது!

No comments:

Post a Comment