Sunday, 14 July 2013

கடல்

ஆடு மேய்க்கும் சிறுவனவன்
பாடலொன்றைப் பாடிக் கொண்டு
ஓடி விட்ட தனி ஆட்டைத்
தேடுகின்றான்.
அவனறிவான் காட்டினுள்
அவிழ்த்து விட்ட ஆடு கூட
அதன் எல்லைத் தாண்டாதென,
பாவமந்த பெற்றோர்.
பெற்ற பிள்ளைகள்
சொல்லாமலே
கடலாடப் போய்
கடலோடு போவது ஏன்?

No comments:

Post a Comment