Friday 26 July 2013

அம்மாவுக்கு சுகமில்லை

















அம்மாவுக்கு சுகமில்லை,
அப்பாவும் நானும்,
அல்லொலகல்லோலத்தின்
அர்த்தம்
அன்றுதான் உணர்ந்தோம்.
ஒரு வேளை உணவிற்க்கே
திண்டாட்டம்.
தேங்காயெடுத்துத் திருகி
பொட்டுக்கடலை சேர்த்து
“மறக்காமல் உப்பிடடா”
அப்பா சொல்ல
அரைத்தெடுத்தால்....
அய்யோ,
மிளகாய் சேர்க்கலையோ?
இது புது வித சட்னி அப்பா...
தோசை அப்பா வார்க்க..
என்ன இது?
எப்படி இந்திய தேசத்தின்
வரைபடத்தை
இங்கே கொண்டு வந்தார்?
எப்படியோ
எல்லாம் கொண்டு
உண்ண அமர்ந்தால்
குடி தண்ணீர்
துளி யில்லை...
என்னால முடியலடா சாமி!
இவ எப்படித்தான்
இந்த வீட்ட சமாளிக்கறாளோ?

No comments:

Post a Comment