Friday 19 July 2013

முதல் ரசிகை

என் கவிதைக்கு
அவள்தான்
முதல் ரசிகை,
எழுதியதைக் கொடுத்தேன்,
வாசித்தாள்!
மனதாரப் புகழ்ந்தாள்!
நான் கேட்டேன்,
என் கவிதை எவ்வளவு
பிடித்ததென்று!
எதற்கிந்த கேள்வி
எனக் கேட்டாள்!
அவளுக்காத் தெரியாது,
என் கணக்கு
எதற்கென்று!
கூட்டலைப் பெருக்கி
கூடுதல் கேட்பேனென்று!
கேட்டதைக் கொடுத்தால்
கேள்வியே இல்லை.
பாக்கியை வைத்தால்
வட்டியின் தொல்லை!
அத்தனை அறிந்தும்
ஆசையாய்
ஒன்றை மட்டும் கொடுத்து
அப்புறம் என்று சொல்லிப்
நழுவிப் போனாள்!
நான்
கவிதையை நழுவ விட்டு
கணக்கை தவற விட்டுக்
கண்மூடிக் கிடக்கிறேன்.
கை தூக்கி விட
வருவாளா
என் பத்தினி?

No comments:

Post a Comment