Tuesday 23 July 2013

ஹிலாரி

                 21000 அடிகள் உயரம் கொண்ட உலகிலேயே உயர்ந்த எவரெஸ்ட் சிகரத்தில் ஏற 1952-ம் ஆண்டில் எட்மண்ட் ஹிலாரி முயற்சி மேற்கொண்டார். முதல் முயற்சியில் தோல்வியடைந்த சில வாரங்களில் இங்கிலாந்தில் கூட்டம் ஒன்றில் பேசும்படி அவர் கேட்டுக் கொள்ளப்பட்டார், ஹிலாரி அப்போது மேடையை நோக்கி நடந்து சென்றபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த எவரெஸ்ட் சிகரத்தின் புகைப்படம் ஒன்றை நோக்கி முஷ்டியை உயர்த்தி உரத்துச் சொன்னார். “எவரெஸ்ட் சிகரமே, முதல் முறையில் என்னை நீ தோற்கடித்து விட்டாய். ஆனால், இரண்டாவது முறையில் நான் உன்னை வெல்வேன். காரணம், நீ எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் வளர்ந்து விட்டாய். ஆனால் நான் வளர்ந்து கொண்டே இருக்கிறேன்!”
                ஓராண்டு கழித்து மே 29-ம் தேதி எவரெஸ்ட் சிகரத்தில் முதல் மனிதராக வெற்றிக் கொடி நாட்டினார் எட்மண்ட் ஹிலாரி.

No comments:

Post a Comment