Tuesday 6 August 2013

மூன்று முறை

       அந்த ஊரில் அந்த தம்பதியரின் சஷ்டியப்த பூர்த்தி. அங்கு வந்த நிருபருக்கு அந்த தம்பதிகளிடம் ஒரு கேள்வி கேட்க ஆசை. அந்த முதியவரைப் பார்த்து நிருபர் கேட்டார், நீங்கள் எபடி இவ்வளவு ஆண்டுகள் இவ்வளவு அன்னியோன்யமாக இருந்தீர்கள்?” என்று.
     அந்த முதியவர் சொன்னார், “அது எங்கள் தேனிலவில் தொடங்கியது” என்று. நிருபருக்கு சுவாரசியம் தொடங்கியது. “ஆஹா, விரிவாக சொல்லுங்கள்” என்றார்.
     “எங்கள் தேனிலவு பயணத்தில் ஒரு மலைப் பிரதேசத்திற்கு சென்றோம். திரும்ப வரும்போது இருவரும் ஆளுக்கு ஒரு குதிரையில் வந்தோம். அவள் வந்த குதிரை ஒரு இடத்தில் இடரி விழுந்தது. அவள் கீழே விழுந்து எழுந்து குதிரையை பார்த்து, “முதல் முறை” என்று சொன்னாள்.
     சிறிது தூரம் போனதும் குதிரை இரண்டாம் முறை இடரி விழுந்தது. அவளும் கீழே விழுந்தாள். மீண்டும் எழுந்து இரண்டாம் முறை என்றாள். நான் எதற்கு குதிரைக்கு இப்படி எச்சரிக்கை கொடுக்கிறாள் என்று நினைத்தேன்.
     சிறிது தூரத்தில் மீண்டும் குதிரை இடரி விழ, கீழே விழுந்தவள் எழுந்து குதிரையை துப்பாகி எடுத்து சுட்டுக் கொன்று விட்டாள்.
     நான், “அய்யோ! இதென்ன இப்படி வாயில்லா பிராணியை சுட்டுக் கொன்று விட்டாயே!” என்று கேட்டேன். உடனே அவள் என்னைப் பார்த்து, “முதல் முறை” என்று எச்சரித்தாள்.

     அன்று முதல், இன்றுவரை நாங்கள் அன்னியோன்யமாக இணைந்து வாழ்கிறோம்” என்றார் முதியவர்.

No comments:

Post a Comment