Tuesday 13 August 2013

வாழ்வினிமை

















            சுடு நீராய் உள்ளத்துள்
சில பல எண்ணங்கள்,
செப்பனிடப்படாத
சாலையைப் போல்,
உருளும் கற்களும்,
மிரளும் மணலுமாக,

ஆற்றிவிடவும்,
அமைதிப் படுத்தவும்,
யாரேனும் உளரோ எனத்
தூரத்துச் சூரியனைத்
தோலைத்து விட்டதாய் எண்ணி
தேடும் கண்களுடன்...

மறையும் சூரியன் கூட
மயக்கும் சூழலை
என்னைச் சுற்றித் தந்ததை
காண முடியாத குருடனாய்...

சுடு நீரின் இடம் போக
தெளி நீரின் சலசலப்பை
உள்ளத்துள் ஊர்ந்து சென்று
காண அறியாத
அஞ்ஞானியாய்...

என் சாலை செப்பனிட
என்னால் இயலுமென,
சுடு நீரை குளிர் நீக்கவும்,
தெளி நீரில் நா இனிக்கவும்,
சுற்றிவரக் கண் சுழட்டி
சிதையாத அழகை ரசிக்கவும்,
உள் நோக்கி நகர்ந்து
உண்மையை புசிக்கவும்,
படிக்கத் தொடங்கினேன்.

வாழ்க்கையே இனிமையாச்சு!

No comments:

Post a Comment