Friday, 16 August 2013

வெற்றிகள்

















எத்தனை முறை பார்த்தாலும்
இயல்பை மீறும் உற்சாகம்!
அடித்தளத்து வேர்களிலே
ஆர்த்தெழுந்த செடிகள்!
தடைகளை யெல்லாம்
தலையை துவட்டி
உதிர்வதாய் கொண்டு
சாகசம் படைக்க
பிறந்த எம் பெண்கள்!
கார்முகிலில் செங்கதிரின்
கீற்றைக் கொண்ட முகங்கள்!
அகம் மலர்ந்த அந்த
அழகு சிரிப்பிற்கு
ஆயிரமாயிரம் வெற்றிகள்
தேடி வரட்டும்!

No comments:

Post a Comment