வகிடெடுத்து மலருடுத்து
தூணடுத்து சாய்ந்திருந்து
மகிழ்வுடன்மட் கலமெடுத்து
மன மினிக்கப் பூசுகிறாள்.
கைவளையின் ஓசையினை
கவின் நிலவும் செவிமடுக்க
மைவிழியாள் நாணியெனை
மௌனமொழி கொண்டழைத்தாள்.
கண்ணசைவே கவிதையென
கார்குழலோ சோலையென
விண் நிலவின் பாதையிலே
விகசித்து காத்திருந்தாள்.
குவியதரச் சுவையெடுத்து
குறு நகையின் மணம்கலந்து
புவியறியா புதுக் கனியாய்
பூத்து எனைப் பார்த்திருந்தாள்.
No comments:
Post a Comment