Wednesday 14 August 2013

ஆதங்கம்



















ஊரை காத்தவனை
வீரனென்று வழி பட்ட சமூகம்
இன்று
எம் எல்லையில்
தன்னுயிரைப் பணயம் வைத்து
குளிரிலும், பனியிலும்
துன்பப் பட்டு
(அந்த இடர்பாடுகளை விவரிக்க
ஆயிரம் கவிதைகள் போறா!)
நாட்டைக் காப்போரை
நினைத்துப் பார்ப்பதில்லை.

எங்களுக்குத் தெரிந்த
போராட்டமெல்லாம்
கல்லெரிதலும்
பஸ் எரித்தலும்,
கடை அடைத்தலுமே!

செக்கிழுத்த செம்மல்
வ உ சி யும்,
குஷ்ட நோய் கொண்டு
கஷ்டப் பட்ட
சுப்பிரமணிய சிவாவும்
யாரென்று தெரிய
எங்களுக்கு நேரமில்லை,

எங்கள் நேரங்கள்
பப்.பிலும், க்ளப்பிலும்
மட்டுமே
செலவழிக்கப் படுகின்றன.

இத்தனைக்கும் மீறி
இந்த பெரும் தேசம் இன்று
உலகத்தை உற்று நோக்க
செய்ததென்றால்,
இந்த தாய்க்கு நிகர்
இவ்வுலகில் யாருமில்லை.

இனியும் இந்நாடு
வளர்ந்தோங்கும்,
செழித்தோங்கும்,
சிறந்தோங்கும்!

தடைகளில்லாமல் வெற்றி வருவதில்லை.
தடைகளை மீறி வருவதுதான் உண்மை வெற்றி!
நான் இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்

No comments:

Post a Comment