Tuesday 13 August 2013

அவன் சிறுபையன்தான்

அவன் சிறுபையன்தான்

பேஸ்பால் தளத்தில் நின்று கொண்டிருந்தான் அவன்.
அவனது இதயத் துடிப்பு எகிறிக் கொண்டிருந்தது.
கள நிலைகள் அனைத்து தயார்.
இனி எதையும் மாற்ற முடியாது.
அம்மாவாலும், அப்பாவாலும் அவனுக்கு உதவ முடியாது.
அவன் தன்னந்தனியாக நிற்கிறான்.
இப்போது ஒரு பலத்த அடி...
அவனது அணி கரை சேர்ந்து விடும்.
பந்து அவனை நோக்கி சீறி வருகிறது.
விளாசுகிறான்.. பந்தை தவற விடுகிறான்.
“ஓ” வென்று எழுந்து அடங்குகிறது கூட்டம்.
உஸ்கள்... கேலிக் குரல்கள்.
யாரோ ஒருவன் கத்துகிறான்.
“அந்த உதவாக்கரை பயல உதச்சுத் தள்ளுங்க”
அவன் கண்கள் தளும்புகின்றன.
இந்த விளையாட்டு இனியும் வேடிக்கையானதில்லை.
எனவே, இதயம் திறந்து சற்றே அவனுக்கு ஓய்வுகொடுங்கள்.
இந்த மாதிரி தருணங்களில்தான்
ஒரு மனிதனை நீங்கள் உருவாக்கலாம்.

தயவுசெய்து இதை மனதில் கொள்ளுங்கள்.
பலமாகக் குரல் ஒலிக்கும்போது
சிலர் மறந்து விடுகிறார்கள்.
அவன் சிறுபையன்தான்.
இன்னும் பெரிய மனிதனாகவில்லை.


உள்ளத்திற்கு இரண்டாவது கோப்பை சூப்” புத்தகத்திலிருந்து.... சுமன்

No comments:

Post a Comment