Tuesday 20 August 2013

ஏன் இப்படி?






















காலைவேளை
கவிதை நினைவுகளை
நூலிலே பதிந்து
அவசரமாய் குளித்து
நடந்தபடி உண்டு,
வெளிப்போழ்ந்த போதுதான்
கார் சாவி காணவில்லை.

எப்போதும் வைக்குமிடத்தில்
இல்லையது.
கணிணி மேசைமேல்
காணவில்லை.
பழைய சட்டை
பைகளிலும் இல்லை.

தடுமாறும் என்னைக்
கண்டு அவள் கேட்டாள்,
என்னவென்று?

காணவில்லை சாவி
கவலையாய் சொன்னேன்.
கால்சட்டைப் பையில்
தேடுங்க ளென்றாள்.
கைவைத்து அசடானேன்.
அங்கேதான் இருந்தது.

இத்தனை நேரம்
என்பையைப் பார்க்காமல்
எங்கெல்லாம் தேடி...
ஏன் இப்படி நான்?

ஒரு நாளும் அவளை
புறப்படும் வேளையில்
பதறி நான் பார்த்ததில்லை.
எனக்கு மட்டும்
ஏன் இப்படி?

No comments:

Post a Comment