Wednesday 7 August 2013

நாரை ஏரி










குளமெங்கும்
பஞ்சுத் திவலைகளாய்
மிதந்து போன நாரைகள்.
இடையிடையே சில
பறந்தும்...
கரையோர நாணல்கள்
தலையாட்டி என்னை
வாவாவென்றன.
மேல் சட்டையைக் கழட்டி
புதர் நடுவில் ஒளித்து
கால் சட்டையுடன்
பாய்ந்தேன்.
மிதந்த நாரைகள்
பறந்தன.
எஞ்சிய நாரைகள் மேல்
நீர் வாரி இறைத்தேன்.
அவை இட்ட சப்தம்
ஆர்வத்தையே தந்தது.
மூழ்கிக் களித்து
மெல்லத் தவழ்ந்து
மூச்சை நிறுத்தி
மணலைத் தடவி
கூக்குரலிட்டு
கும்மாளம் கொட்டி
குளித்த நேரம்
எவ்வளவோ?
கால் சட்டைக் கழட்டி
கசக்கிப் பிழிந்திட்டு
மேல் சட்டை மாட்டி
வீட்டிற்குச் சென்றதும்
வாங்கிய அடிகள்

வலிக்கவேயில்லை.

No comments:

Post a Comment