கவிதைக்கரு
தேடி
கவலையுட னிருந்தேன்.
கடுகி அருகில்
வந்தாள்.
கையிலே இரண்டு
பச்சை மிளகாய்
தந்தாள்.
கடியடா,
இன்றேல்
இதைப் படியடா
கவிதைக் கரு
கிடைக்கு மென்றாள்.
கண்ட கழிசடை
எம்மினத்தை
கடிந்து
பேசியதை எழுத
கவிதையால்
இயலாதடி.
பைந்தமிழில்
அதற்கு
வழியேதடி?
வேற்று மொழி
கற்று வந்து
வீசுகிறேன்
வார்த்தைகளை...
No comments:
Post a Comment