Friday 9 August 2013

கருப்பு ரோஜா


பேருந்து நெருக்கத்தில்

பக்கத்திலவள்.
மனம் தொடாமல்
இதழ் தொடும் தொலைவில்.
இம்சையாய் உணர்ந்தேன்.

பூச்சூடிய மணம்
நாசியை நெருட
பூந்தளிர் தேகம்
மெல்ல மெல்ல உரச
முப்புரமும் எனை
முட்டித்தள்ள
மனம் தொடாமல்
அவளைத் தொட
மனமே இல்லை.
விலகிப் போக
வழியும் இல்லை.

கருத்த உடையில்
மின்னும் ரோஜா!
குடை யிமை விரித்து
கருவிழி மலர்ந்து
கடைக்கண்ணாலவள்
கண்டாளெனை.

அடுத்த குலுக்கத்தில்
அனைவரும் என்மேல் சாய,
இரும்புக் கம்பியை
இருகப் பிடித்து
முதுகில் பாரம்
முழுதும் ஏற்று,
அவளை மட்டும்
தவிர்த்தே நின்றேன்.
எனினும்
விட்டுபோக
மனமெயில்லை.

தூரத்து நிலவை
அருகினில் கண்டதால்
துடித்ததென் மனது.
அடைவேனோ?
தொலைவேனோ?

நிறுத்தம் வந்து
இறங்கிப் போனாள்.
என்னுள் சுமையை
இறக்கிப் போனாள்.

மனம் தொடாமல் 
மங்கையைத் தொட
மனமில்லை எனக்கு.
மனம் தொட வாய்ப்புகள்
வராமலா போகும்?

1 comment:

  1. // மனம் தொடாமல்
    அவளைத் தொட
    மனமே இல்லை.
    விலகிப் போக
    வழியும் இல்லை// நல்ல மனம். அவளும் அப்படித்தான் நினைத்திருக்க வேண்டும்.

    ReplyDelete