கணவன் மனைவிடையே கருத்து வேறுபாடிருக்கலாம்.
ஆனால், காதல் என்றுமே தொய்யக் கூடாது. பெரும்பாலும் கருத்து வேறுபாடு வரக் காரணம்
புரிதலின்மைதான். ஆணானாலும், பெண்ணானாலும் வேறுபட்டக் குணாதிசயங்கள் கொண்டவர்
என்பதை உணர வேண்டும்.
ஒருவர் கோபத்தில் இருக்கும்போது மற்றவர்
அமைதி காத்தல் நலம். என் தாயும், தந்தையும் அப்படித்தான். ஒருவர் கோபத்திலிருக்கும்போது
மற்றவர் பேச மாட்டார். அந்த மாதிரி சமயங்களில் பேச்சைக் குறைப்பது நலம்.
மற்றொரு முக்கிய காரணம், ஒருவருடைய
குடும்பத்தை சீண்டிப் பேசுவது. “உன் தந்தை அப்படி, உன் தாய் இப்படி, உன் அண்ணன்
இப்படி” என்று. ஒரு பெண் 20 வருடங்களாக வளர்ந்த குடும்பத்தை அவனுக்காக விட்டு
வந்திருக்கிறாள். அந்த குடும்பத்தைப் பற்றி பேசாமல், அவர்களை எப்போதும் உயர்த்திப்
பேசிப் பாருங்கள். உங்கள் துணை உங்களை எந்நாளிலும் தாழ்த்தவே மாட்டார். இது
ஆணுக்கும் பொருந்தும். அந்த ஆணுடைய குடும்பத்தைப் பற்றி பெண் தாழ்த்திப் பேசாமல்
இருந்தால், அந்த பெண்ணை ஆண், தங்கமென வைத்துக் கொண்டாடுவார்.
ஒருவர் களைத்திருந்தால், அந்த சமயத்தில்
அவருக்கு ஆறுதலாக மட்டும் இருத்தல் நலம். அப்போது அவரை சீண்டினால், பின்விளைவு
சகிக்க முடியாது.
பொதுவாக, தவறுதல் இயல்பு. நாம் தவறுகளைச்
சுட்டிக் காட்டாமல், அவரின் நற்பண்புகளை மட்டும் பார்த்து, அவரைப் பற்றி
உயர்த்திப் பேசுவமாயின், அந்த தம்பதியைப் பார்த்து, அந்த குழந்தைகள் மிக நன்றாக
வளரும் (என்னைப் போல).
என்ன கொண்டு போகப் போகிறோம்? இருக்கும்வரை நம்மிடம்
உள்ளவரை அனுசரித்து, ஆனந்தம் பெற வகை செய்து வாழ்ந்தால் ஒவ்வொரு நாளும் இனிய நாளாக
அமையும்.
என் சொந்த அனுபவங்களைக் கொண்டு--------
சுமன்.
No comments:
Post a Comment