Wednesday, 14 August 2013

வலி

மாலை வேளையில்
மழையில் நனைந்து
கனலாய் தேகம் சுட
கனன்று கொண்டிருந்தாள்.
நிமிடத்துக்கு 
நூறு முறைத்
தொட்டு தொட்டு
பார்த்திருந்தேன்.

விழித்தவள் சிரித்தாள்.
கண்டவன் கனத்தேன்.
ஏனிப்படி
என்னைப் படுத்துகிறா யென
எரிந்து விழுந்தேன்.
மீண்டும் சிரித்தாள்.

கோபத்தில், அடிக்கவா என்றேன்.
மீண்டும் சிரித்தாள்.
அடித்துதான் பாரென்றாள்.

என் உடலில் சூடேர
உன் மனது கொதித்ததடா!
என்னை நீ அடித்தால்
உனக்கன்றோ வலிக்குமென்றாள்.
உண்மையன்றோ?

No comments:

Post a Comment