Monday 12 August 2013

வாழ்வு

     அந்த கடற்கரையின் கரையோர மணற்பரப்பில் எங்கு பார்த்தாலும் குட்டி மீன்கள் இறைந்து கிடந்தன. ஒரு சின்னப் பெண் அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து கடலில் வீசிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த ஒரு முதியவர் அந்த குட்டிப் பெண்ணைப் பார்த்து, “ ஏனம்மா இந்த மீன்களைக் கடலில் எடுத்து எறிந்து கொண்டிருக்கிறாய்?” எங்க் கேட்டார்.
     அந்த சுட்டிப் பெண், “ நான் இந்த மீன்கள் உயிர் வாழ வேண்டி கடலில் வீசிக் கொண்டு இருக்கிறேன். இப்படியே விட்டால் அவை இறந்து போகக் கூடும்” என்றாள்.
     அப்போது அந்த பெரியவர், “ எவ்வளவு மீன்கள் இறைந்து கிடக்கின்றன! நீ ஒரு சின்னப் பெண் இங்கு என்ன செய்ய முடியும்?” என்று கேட்டார்.
அப்போது அந்த சுட்டிபெண், “என்னால் இதோ இந்த மீனுக்கு வாழ்வு கொடுக்க முடியுமே!” என்று ஒரு மீனைத் தூக்கி கடலில் வீசினாள்.


மனதை பாதித்தக் கதை----- சுமன்

No comments:

Post a Comment