Friday, 16 August 2013

மீனுக்குப் பொரி
















அந்திமாலை கதிர்கள் விண்ணில்
அழகு செய்யும் நேரம்.
அலரிச் செங்கண் பூத்த உந்தன்
கவிதை சொல்லித் தாவும்
விந்தை மேவு விழியி னோர
விமலக் காதல் தேடி
விண்ணின் பூக்கள் விழி யிருத்தி
விதைத்தி ருந்தேன் நானும்.

மந்திரங்கள் விண்ணி லோத
கோவில் வந்த நீயும்,
மனம் நிறைந்த காதல் செண்டு
மலர் தொடுத்து மீனும்
சுவைத்திருக்க பொரி கொடுத்து
நீரை அள்ள ஓடும்
தினம் மகிழ்ந்து காணு மெந்தன்
மனமும் முகிலி லாடும்.

No comments:

Post a Comment