Tuesday 6 August 2013

நிறம் மற


















பலமுறை சொன்னேன்
தலைமுறை என்றாய்
பாசத்தில் வந்தேன்
வேஷமாய் கொண்டாய்.

நிறமதன் காதல்
நிறந்தரமில்லை
மனம் தொடும் காதல்
மாறுவதில்லை.

கரு நிற தேகம்
காதலில் பிழையோ?
வெளிர் நிறமென்றால்
வேதனை இலையோ?

இதழினில் பூக்கும்
இள நகைப் போதும்
மனந்தனில் நாளும்
மார்கழி மாதம்.

கருவிழிச் சுற்றி
ஒளியென மின்னல்
கரு நிற தேகம்
பளபள வென்னும்.

எல்லாம் சரியடி
என்னுயிர் காதலி,
என் மனம் சூடிடும்
தேவதை நீயடி.

உன் நிறம் கண்டே
காதலைக் கொண்டேன்.
என் மனம் உன்னுடன்
இணைந்திடக் கண்டேன்.

வாழ்ந்திடும் காலம்
யாவையு முந்தன்
காதலில் கூடி
கலந்திட வந்தேன்.

உன் நிறம் மறந்து
என்னுடன் இணைந்து
கொண்டிடும் காதல்

காலமும் வாழும் வா!

No comments:

Post a Comment