Friday 9 August 2013

குடிமகன்











எதற்குத்தான்
இப்படியோர் வாழ்க்கையோ?
வேலைக்குச் சென்று
வீட்டிற்கு வரும்போதெல்லாம்
ஆகாயத்தில் மிதந்து,
தன் நிலை உணராமல்,
தறுதலையென்று பெயர் வாங்கி,
பெற்ற குழந்தைகள் கூட
மதியாத
இப்படியோர் வாழ்க்கை...!
காரணங்கள் சொல்லலாம்,
மகன் சரியில்லை,
மனையாள் சரியில்லை,
மதிப்பில்லை,
கடன் தொல்லை,
யாருக்கில்லை?
குறைகளற்ற மனிதன்
யாருண்டு?
குறைகள் இருப்பதால்தானே
இறைவனைத் தேடுகின்றான்?
குறையுள்ள வாழ்க்கையை
நிறை செய்யத்தானே
குடும்பம் வந்தது!
மனையாளும், மக்களு மென
மடியில் பொறுப்பைத் திணித்தது!
அடுத்தவர்களுக்கு தன்னை
அர்ப்பணிப்பதில்தானே
ஆனந்தம் இருக்கிறது!
அயர்ந்து கீழே சாய்கையில்
அடுத்தவர் உதவி நாட
எனக்குள்ள தகுதி
என் சேவைதானே?
தவறுக்கு நியாயம்
தர்க்கங்கள் சொல்லும்,
விளக்கங்களெல்லாம்
வாழ்நாளைக் கொல்லும்.
பொறுப்பற்ற வாழ்க்கை
நாய் பெற்ற தென்னை.
குறைகளே இல்லா
வாழ்க்கையைக் கொண்டவர் யார்?
தடைகளே இல்லா
வெற்றியைக் கண்டவர் யார்?
வாழ்க்கையின் முழுமை
மற்றவர்க்காய்
வாழ்வதிலேதான்.
போதையில் வாழ்தல்
சாதனையில்லை
பொறுப்புடன் வாழ்ந்தால்
வேதனையில்லை.
குடியினை மாற்ற
குவலயம் வேண்டாம்,
அரசும் வேண்டாம்,
தன் நிலை

உணர்ந்தால் போதும்,

No comments:

Post a Comment