Friday, 5 July 2013

அழும் குழந்தை



             அந்த வணிக வளாகத்தின் நடுவே அந்த அழகான சுட்டிக் குழந்தை அடம் பிடித்துக் கொண்டிருந்தாள். அழுகையும் கூட.., தாயோ தன் பொறுமை இழப்பது தெரிந்தது. அப்படி ஓர் அடம். நான் அக்குழந்தையை சமாதானப் படுத்தலாமா என்றெண்ணி அடுத்துச் சென்றேன். தாய் சொல்லிக் கொண்டிருந்தாள், “ஜெனிஃபர் ரிலாக்ஸ்! இது பொது இடம், ஜெனிஃபர் ரிலாக்ஸ்!”
             குழந்தையின் அடம் அதிகமானதே அல்லாது குறையவில்லை. தாய் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தாள். “ஜெனிஃபர் ரிலாக்ஸ், பொது இடத்தில இப்படி behave பண்ணாத”. நான் பொறுமை இழந்து அடுத்து சென்று அப்பெண்மணியிடம் கேட்டேன், “மன்னிக்கணும், நீங்க பொறுமையா இருக்க சொல்றது சரிதான், ஆனா, அந்த சின்னக் குழந்தைக்கு உங்க வார்த்தைகள் புரியுமா?”
            அப்பெண்மணி சொன்னாள், “யார் சொன்னா இத அவளுக்கு சொல்றேன்னு? ஜெனிஃபர் என்னோட பேர்!”

No comments:

Post a Comment