Friday, 5 July 2013

போதை


காலமேகம் கடிதாய் போகும்
வாலிப வாழ்வு வெகுவாய் தீரும்
சூழ லொன்றைத் தேர்ந்தெடுத்து
சுவைபடத்தான் வாழ்ந்து காட்டு!

கூடிக் கொண்டு போதை யேற்றி
கூத்தடித்தல் வாழ்க்கையில்லை,
உண்மையற்ற போதை கொண்டு
உன் மகிழ்ச்சி வருவதில்லை.

என் மகிழ்ச்சி என்னில் இல்லை,
என்னைச் சுற்றி உள்ளவர்க்கு
தரும் மகிழ்ச்சி தன்னில் உண்டு,
என்றுணர்ந்து வாழ்ந்து காட்டு!

No comments:

Post a Comment