சோலைக்குள் பூத்தாடும் சொப்பனமே,
சொர்க்கத்தில் காணாத யவ்வனமே,
பாலைக்கும் பனிசிந்தும் பூவனமே,
பாசத்தால் எனைவென்ற காவியமே!
வாழ்வெங்கும் ஒளி சிந்தும் வளமானாய்
வானுறையும் தேவதைக்கு மேலானாய்
நான்பெற்றக் கவிக்கெல்லாம் யாப்பானாய்
நாளெல்லாம் மணம் வீசும் பூவானாய்!
நீயென்னுள் வாழ்வதினால் நிறைவானேன்
நிகழ்கால எதிர்கால சுமை காணேன்
சேயென்னைக் காக்கின்ற தாயானாய்
செம்மொழியே நான் செய்த
புண்ணியம் நீ!
No comments:
Post a Comment