Tuesday, 9 July 2013

ஹீரோ



அவசரமாய் ஒரு குளியல்
ஆடை அணிந்தபடி
அள்ளித் தின்ற உணவு,
நாடித் துடிப்பை
நோக்காமல்
வாகனத்தை விரட்டியபடி
எங்கு செல்கிறேன்?
வந்திருக்கு
என் ஹீரோ சினிமா....!
கட் அவுட்டில் பாலூற்றி
முதல் காட்சி பார்த்து
முக நூலில்
பேச வேண்டாமா?
யாரவர் என் ஹீரோ?
எனைப் பெற்ற
பெற்றோரா?
சொல்லிக் கொடுத்த
அருமை ஆசிரியரா?
தோள் கொடுக்கும்
தோழனா?
என்றைக்கு
என் மனதில்
மாற்றம் வரும்?
என் வாழ்வின் உயர்வுக்கு
வழிகாட்டியாய் வருபவரை
என் ஹீரோ என நினைக்க...!
எனை மற்றோர்
ஹீரோ என நினைக்க வைக்க!

No comments:

Post a Comment