Thursday, 4 July 2013

சாதியற்ற சமுதாயம்

சாதி அல்லாத வாழ்வை
காணும் பொன்னாளைத் தேடி
மாற்றம் வந்தாட வேண்டி
வாடும் என்னுள்ளம் ஏங்கி.

நாடு முன்னேறும் என்று
நம்பிக் கை கொண்டு வாழ்ந்து
இன்று சாக்காடைக் கண்டு
இழந்து பட்டேனே நொந்து.

காந்தி பெரியார்கள் கோடி
வந்து சொன்னாலும் கூட
மாறும் மனமில்லா மாந்தர்
மீள வழியற்ற சாபம்.

உருகி கண்ணீரைப் பருகி,
மருகி செந்நீரில் கருகி,
விரைவில் என் தேகம் மருவும்,
சருகில் செந்தீயாய் சரியும்,

அன்றேனும் நம்வாழ்வில் சாதீ
அழிந்ததென்று சொல்வாயா தோழா?
இழக்காத துளியாக என்னுள்
நம்பிக் கை வாழும் என்றும்...!

No comments:

Post a Comment