Wednesday, 3 July 2013

முகப் புத்தகம்



அடுக்கடுக்காய் புத்தகங்கள்
அவையே என் தலையணையாய்
படுத்துறங்கி எழும்போது
பதிவுகளாய் நினைவலைகள்.
முகம் பதிந்த புத்தகங்கள்
முகமறியா பயணங்கள்
முடிவுற்றதோ எனும்போது
மீண்டுமொரு புது தொடக்கம்.
நானுங்கள் நட்பு வலைப்
பின்னலிலே நுழைந்திடவே
நாள் குறித்து திரும்பி வந்தேன்,
நண்பர்களே ஏற்பீரோ?

No comments:

Post a Comment