Thursday 6 June 2013

உன் சேவை

எனக்கென ஒரு வரம் கேளடிப் பெண்ணே!
என்னுயிர் நீயென உன்னுயிர் நானென
இனிவரும் பிறப்பிலும் கூடிட வேணும்,
இறைவனை அருள்தரக் கோரிடுக் கண்ணே!


வாழ்வினில் நீயென் துணையென வரவே
தாழ்விலும் மேட்டிலும் சுக நடைப் போட்டேன்,
சோர்விலும் உன்கரம் சுகந்தரக் கண்டேன்,
தேர்விலுன் விழிதரும் பலம் பெறக் கொண்டேன்,


மகிழ்ந்திடும் நொடிகளில் நீயெனைப் பற்றி
மனமதிற் திளைக்கா திருக்கவும் செய்தாய்.


கதிரவன் ஒளிதர காரிருள் விலகும்,
கலைமகள் நீவர என்மனம் மலரும்
பொழுதுனை நினைக்கையில் பூமணம் கமழும்,
அமிழ்துனை அனுதினம் பருகிட பலமே,


சுய நலம் என் வரம் எனக்கது புரியும்,
சுவையிலை உனக்கிது என்பதும் புரியும்,
இனிவரும் பிறப்புகள் அனைத்திலும் நீயென்
இனியவளாக உடன் வர வேண்டும்.


பாரதக் கதைதனில் லஷ்மணன் அண்ணன்
காரிகை நானுன் கணவனாய் பிறப்பினும்
ஒரு பிறப்பேனும் நான்மனை யாளாய்
உன் நலம் பேணும் வரம் கேட்பாயா?

No comments:

Post a Comment