Friday, 21 June 2013

ஓடம்

வாழ்க்கை நதி யோடம்
பல வாறா யோடும்,
துடுப்போடும்
விசையோடும்,
வெறுங் கரத்தை
வீசியபடி,
உற்சாகம்
இருந்தாலும்,
இழந்தாலும்
முன் பாரம்
பின் பாரம் சுமந்து,
தன் பாரம் எங்கோ
நடுவிலே இழந்து,
எவ்வாறேனும்
போய்த்தானே
ஆக வேண்டும்?

No comments:

Post a Comment