Saturday 1 June 2013

உன்னைக் காண

என்னில் என்னைத் தேடவே
விண்ணைத் தேடிச் செல்லவோ?
கண்ணை மூடிக் கொண்டே நான்
கனவின் வடிவம் நாடவோ?

உயிரைக் கூட ஒரு நிலையில்
உலகின் மையத் துள் காணாம்.
உணர்வின் வேறு வடிவமதை
உணர்ந்து கொள்ள வழி யுண்டோ?

நடுவில் வந்த மானுடன் நான்
நரனாய் வாழ்ந்து மாண்டிடுவன்
நதியுள் வாழும் நுண்ணுயிரின்
வாழ்வின் ரகசியம் அறியிலையே!

உண்மைக் காணும் என் துடிப்பில்
உறுத்தும் விதமாய் எது முண்டோ?
உவமை பொய்மை எதுமின்றி
உன்னைக் காண வழியுண்டோ?

No comments:

Post a Comment