Friday 7 June 2013

கசடா? கரிசலா?

ஜனனம் முதல் இன்று வரை
படிந்த எண்ணங்கள்
கசடா?
கரிசல் மண்ணா?
விளை நிலமா?
வெறும் காடா?
விதைகளைத் தூவும்
விருட்சமா?
மலடான புதரா?
துடைத்து விட்டு புதிதாய்
படைக்க ஆசை.
இயலுமா?
இன்றேல்
பறித்தெடுத்து புதைத்து
விதை வளர்க்க முடியுமா?

No comments:

Post a Comment