Sunday 2 June 2013

பாஸ்

ஒரு கடையில் மூன்று கிளிகள், நான் விலை பேச போனேன்.
“முதலாமது கிளி எவ்வளவு?”
“100 ரூபாய்” பதில் வந்தது.
“ஓ, ஏன் அவ்வளவு?”
“இது பேசும்”
“சரி, இரண்டாமது கிளி எவ்வளவு?”
“200 ரூபாய்”
“ஓ ஓ! ஏன்?”
“இது பேசும், கூடவே பாடும்”
“அப்படியா? மூன்றாமது கிளி?”
யோசித்து சொன்னார், “இது 500 ரூபாய்”
“ஆஹா, அப்படி என்ன இந்த கிளிக்கு?”
அவர் பதில் உடனே கூறவில்லை.
நிறைய ஆலோசித்தார்.
உள்ளே சென்று தாத்தாவைக் கூட கேட்டு வந்தார்.
“அடடா1 சரியா தெரியலைங்க, இது ஒண்ணுமே செய்யாது, ஆனா, மத்த ரெண்டு கிளியும் இந்த கிளிய பாஸ், பாஸ்னு கூப்பிடும்!!!!!!!!!!!!!!!!!”

(கேட்டது)
பாஸ்னா என்ன கொம்பாடா?

No comments:

Post a Comment