Saturday, 15 June 2013

ஆட்டு மந்தை

மேய்ப்பனைத் தேடுமென் பயணம்,
தூரமும் தெரியாமல்
பாதையும் புரியாமல்
பயணித்தேன்
மந்தையுள் ஒன்றாய்.

ஆண்டுகள் போயின,
எனைச் சுற்றி
ஆடுகள் கூடின,
வெயிலும், மழையும்,
காற்றும் கடந்து
தொலைந்து போன நிமிடங்கள்
நினைவிலில்லை.

மந்தையுள் ஒன்றென மேய்ந்தேன்.
கழிவுகள் களைந்தேன்,
உறக்கங்கள் விழித்தேன்,
விழித்தபடி உறங்கினேன்.

சுவையுடன் சில தருணங்கள்,
சுவையிலா பல நிமிடங்கள்,
இனியும் இப்படியே,
இதற்க்குப் பேர்தான்
வாழ்க்கையா?

No comments:

Post a Comment